உள்ளூர் செய்திகள்

தாகூர் பொறியியல் கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா

தலைவாசல்: தலைவாசல், தேவியாக்குறிச்சியில் உள்ள தாகூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் ஜெய்கணேஷ் வரவேற்றார். நிறுவன தலைவர் ஆண்டவர் முத்து-சாமி, தலைமையுரை வழங்கினார்.சிறப்பு விருந்தினரான, முனைவர் செந்தில்குமார், அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் வேலைவாய்ப்பு சிரமங்களை, எவ்வாறு திறமைகள் மூலம் மெருகேற்றுவது என, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று அனுபவம் மூலம் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள அறிவுறுத்தினார்.தாகூர் கல்வி நிறுவன செயலர் மணிகண்டன், பொருளாளர் காளியண்ணன், கல்லுாரி துணைத் தலைவர்கள் காளியப்பன், ரவி, இணை செயலர்கள் வசந்தகுமார், அருண்குமார் மற்றும் ராமசாமி, விஜயகுமார், கல்வி குழும இயக்குனர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்