அரசு இன்ஜி. கல்லூரிகளில் 200 இடங்கள்
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 4354 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துவிட்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை 4885 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 2700 சேர்க்கை இடங்கள் காலியாக உள்ளன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 22,214 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை பெற்றுவிட்டனர். இன்னும் 1,10,456 இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலைக்கழகம், அரசு கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தமாக 31,453 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 1,13,356 இடங்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.