பாவை பாலிடெக்னிக் கல்லுாரி 24வது பட்டமளிப்பு விழா
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பாவை பாலிடெக்னிக் கல்லுாரரியில், 24வது பட்டயமளிப்பு விழா நடந்தது.பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் நடராஜன் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் இயக்குனர் (நிர்வாகம்) ராமசாமி வரவேற்றார். தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆடிட்டர் நடராஜன் பேசுகையில், “இந்த நேரத்தில் நீங்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். கற்ற கல்வி தொழில்நுட்ப கல்வியாகும். எனவே உங்களின் எண்ணம், பார்வை, செயல் அனைத்திலும் உங்களின் தொழில்நுட்ப அறிவு வெளிப்பட வேண்டும். உங்கள் திறமைகளை நீங்கள் மதித்து, அதற்கு மதிப்பு கூட்ட வேண்டும். நேர்மையான குறிக்கோள், சரியான பாதை, விடாமுயற்சி, கவனமான மற்றும் வேகமான உழைப்பு, சீரிய ஒழுக்கம், சிறந்த பக்தி போன்றவை உங்களை உயர்த்தும்,” என்றார்.தொடர்ந்து அனைத்து துறைகளை சார்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பட்டயம் வழங்கப்பட்டது.பாவை கல்வி நிறுவனங்களின் முதன்மையர் ஜெயலெட்சுமி நன்றி கூறினார். பாவை பாலிடெக்னிக் கல்லுாரியின் முதல்வர் சிலம்பரசன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.