உள்ளூர் செய்திகள்

குழந்தைகளை சிந்திக்க வைக்கும் 3டி பசில் புத்தகங்கள்

கோவை: கிராஸ்கட் ரோட்டின் ஓரத்தில் ஒரு கணவன் மனைவி புத்தகங்களில் இருக்கும் பாகங்களை வைத்து கப்பல் செய்துக்கொண்டிருந்தனர்...என்ன என்று பார்த்தால், இது தான் 3டி பசில் புத்தகம் என்று கூறினார்கள்....அவர் பெயர் செல்வம் சொந்த ஊர் வத்தலக்குண்டு, இவர் இந்த வகை 3டி புத்தகங்களை சென்னையில் இருந்து மொத்தமாக வாங்குவாரம். ஊர் ஊராக திருவிழாக்களில் ரூ.120 க்கு இந்த புத்தகங்களை விற்கிறார்.இப்புத்தகங்களில் சிறு சிறு துளைகள் இருக்கும் என்றும் அதில் எண்கள் இருக்கும் என்றும் அதற்கு சரியான இடத்தில் குறிப்பிட்ட பாகங்களை பொருத்தினால் ஒரு 3டி வடிவம் வரும் என்று கூறுகிறார்.பெண்களுக்கு வீடு, பொம்மை போன்றவை என்றும் ஆண் குழந்தைகளுக்கு ஹெலிக்காப்டர், பீரங்கீ, கப்பல் என்ற 20 வகையாக வடிவங்கள் இருக்கிறது, திருவிழாக்களில் இவர்களை அழைக்கலாம் என்று கூறுகிறார் இவர். மினிமம் 20 புத்தகங்கள் வாங்குவது என்றால் டோர் டெலிவரி கூட செய்கிறார்.இந்த வகை வடிவமைத்தல் பொம்மைகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் சிந்தனைத் திறனை அதிகரிக்கும், கை மற்றும் கண் ஒருங்கிணைப்பு, கற்பனை திறன் மற்றும் படைப்பாற்றல் அதிகரிக்கும் , கவனச்சிதறல் குறைதல், திரை நேரத்தை குறைத்தல் போன்ற காரணங்களால் பெற்றோருக்கு இது உதவியாக இருப்பதாக செல்வம் கூறுகிறார்.இந்த புத்தகங்களை வாங்க வேண்டும் என்றால் இந்த எண்ணில் 7845931154 தொடர்புக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்