உள்ளூர் செய்திகள்

கலைத்திருவிழா போட்டிக்கு 346 பேர் தேர்வு

திண்டுக்கல்: மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்று 346 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றதில் அதிகளவில் மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்.பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுன்றன. பள்ளி, வட்டாரம், மாவட்டம் என போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியில் மாநில போட்டிகள் நடைபெறும்.இப்போட்டிக்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 346 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 252 பேர் மாணவிகள் என்பது குறிப்படத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்