மருத்துவ மாணவர் விடுதியில் அயர்ன் பாக்ஸ் பயன்படுத்த தடை
சென்னை: மருத்துவ மாணவர் விடுதிகளில், தனிப்பட்ட முறையில் 'அயர்ன் பாக்ஸ், ஏர் கூலர், ஜூஸ் மிக்ஷர்' ஆகியவற்றை பயன்படுத்துவதை தடுக்க, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் விடுதிகளில், மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன.அதே நேரம், பொருளாதார ரீதியில் மேம்பட்ட மாணவர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை பயன்படுத்துகின்றனர். இவை, மற்ற மாணவர்களுக்கு ஏக்கத்தை ஏற்படுத்துவதுடன், சில நேரங்களில் ஆபத்தையும் ஏற்படுத்துகிறது.எனவே, அரசு விடுதிகளில், மாணவர்கள் தனிப்பட்ட முறையில் மின்சாதன பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு பயன்படுத்திய மாணவர்களுக்கு, 2,000 - 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்து, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி விடுதி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது.