உள்ளூர் செய்திகள்

குரூப் - 4 தேர்வு இலவச பயிற்சி கிருஷ்ணகிரியில் 76 பேர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கியது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். இப்பயிற்சி வகுப்பை, துணை கலெக்டர் (பயிற்சி) அபிநயா தொடங்கி வைத்தார். அப்போது, பயிற்சியில் கலந்து கொண்ட, 76 பேருக்கு பாடத்திட்ட நகல்களை வழங்கிய, துணை கலெக்டர்அபிநயா பேசியதாவது:அரசு பணிகளுக்கான பயிற்சி வகுப்புகளின் மூலம், தேர்வர்கள் சமச்சீர் புத்தகங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். மேலும், சுயமாக பாடக்குறிப்புகள் எடுக்கும் முறைகள், மாதிரி தேர்வுகளின் பயன்கள், தேர்வு நேர மேலாண்மை மற்றும் வினாக்களை சரியாக எதிர்கொள்ளும் வழிகள் குறித்த தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம்.பயிற்சி பெறும் அனைவருக்கும் இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படுகிறது. இங்கு பள்ளி பாடப்புத்தங்கள் உட்பட, 3,000க்கும் மேற்பட்ட நுால்கள் அடங்கிய நுாலகம், இலவச இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகளை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மையத்தில் நடத்தப்படும், தொடர் மாதிரி தேர்வுகள் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொண்டு, தேர்வில் எளிதில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்