உள்ளூர் செய்திகள்

அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு

சென்னை: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஜனவரி, 1 முதல் அகவிலைப்படியை, 4 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளார்.அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கையின்படி, &'2023 ஜூலை 1 முதல், மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம், தமிழக அரசும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்&' என, முதல்வர் அறிவித்தார்.தற்போது, மத்திய அரசு பணியாளர்களுக்கு, கடந்த ஜன., 1 முதல் 46சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி, தமிழக அரசு பணியாளர்களுக்கும், ஜன., 1 முதல், 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை, 4 சதவீதம்உயர்த்தி, 50 சதவீதமாக வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால், ஆண்டுக்கு 2,587.91 கோடி ரூபாய், அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்