உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்டத்திற்கு ரூ.404.41 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில், நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும், அனைத்து அரசு பள்ளிகளிலும், ஒன்றுமுதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, முதல்வரின் காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்த, தமிழக அரசு அனுமதி அளித்து, 404.41 கோடிரூபாய் ஒதுக்கி உள்ளது.கடந்த ஆண்டு முதற்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில், 1.14 லட்சம்மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், 33.56 கோடி ரூபாயில், காலை உணவு திட்டம் துவக்கப்பட்டு, 33.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அடுத்து, 433 மாநகராட்சி,நகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகளில், 56,098 மாணவர்களுக்கும்; சென்னை மாநகராட்சி மண்டலம் ஒன்றில் விடுபட்ட, ஒரு துவக்கப் பள்ளியில் உள்ள, 62 மாணவர்களுக்கும், காலை உணவு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள, அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள, 31,008 அரசுபள்ளிகளில், 18.54 லட்சம்மாணவ - மாணவியருக்கு, நடப்பாண்டு காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி, அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதற்கு, 539.88 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என, சமூக நல இயக்குனர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.அதை பரிசீலனை செய்த அரசு, திட்டத்தை செயல்படுத்த, 404.41 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்