உள்ளூர் செய்திகள்

உயிரிதொழில்நுட்ப தகுதி தேர்வு: 516 பேர் பங்கேற்பு

கோவை: நாட்டில் உள்ள பல்கலைகள், உயர் கல்வி நிறுவனங்களில் உயிரிதொழில்நுட்பத்துறையில் முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கும், ஆராய்ச்சி படிப்புகளுக்கான தகுதியை பெறுவதற்கும் தேசிய நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.இதற்கென, தேசிய தேர்வு முகமை சார்பில் பட்டதாரி திறனாய்வு தேர்வு (ஜி.ஏ.டி.,) மற்றும் உயிரித்தொழில்நுட்ப தகுதித் தேர்வு (பி.இ.டி.,) நடத்தப்படுகிறது. கோவை மாநகரில் இரு மையங்களில் நேற்று காலை, மதியம் என இரு பிரிவுகளாக ஆன்லைன் தேர்வு நடந்தது.வரதராஜபுரம் அடுத்த உப்பிலிபாளையத்தில் உள்ள யு.டி.சி., நிறுவனத்தில் நேற்று காலை 09:00 முதல் மதியம் 12:00 மணி வரை 120 பேர், மதியம் 3:00 முதல் 6:00 மணி வரை 179 பேர் என, 299 பேர் எழுத இருந்தனர்; 43 பேர் பங்கேற்கவில்லை.அதே போல், பொள்ளாச்சி ரோடு, ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில் காலையில் 84 பேர், மதியம் 200 பேர் என, 284 பேர் எழுத இருந்தனர்; 24 பேர் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்