அரசு வேலை வாய்ப்புக்கு 54.25 லட்சம் பேர் பதிவு
சென்னை: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 54.25 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கடந்த டிசம்பரில் 64.13 லட்சம் பேர் வேலைக்காக பதிவு செய்திருந்தனர். கடந்த பிப்.29 நிலவரப்படி, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 54.81 லட்சமாக குறைந்தது.கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை 54 லட்சத்து 25,114 ஆக உள்ளது. இவர்களில் 25 லட்சம் பேர் ஆண்கள், 29.24 லட்சம் பேர் பெண்கள், 285 பேர் மூன்றாம் பாலினத்தவர்.பதிவு செய்திருப்போரில் 10.84 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள்; 23.92 லட்சம் பேர் 19 முதல் 30 வயது வரை உள்ள கல்லுாரி மாணவர்கள். மேலும் 17.03 லட்சம் பேர், 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்; 2.38 லட்சம் பேர் 45 முதல் 60 வயது வரை; 7,079 பேர் 60வயதுக்கு மேற்பட்டோர்.