உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்டம்: 76,911 பேர் பயன்

உடுமலை: தொடக்க பள்ளி மாணவருக்கான, காலை உணவு திட்டம், குண்டடம் ஒன்றியத்தில் உள்ள, 77 அரசு பள்ளிகளில் முதல்கட்டமாக துவங்கப்பட்டது; 1,429 மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.திட்டம் விரிவாக்கம் செய்த பிறகு, மாநகராட்சியின், 120 பள்ளிகள் உட்பட, மாவட்டத்தில் உள்ள 1,157 பள்ளிகளில் பயிலும், 76 ஆயிரத்து, 911 மாணவ, மாணவியர் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர்.திங்கள், வியாழக் கிழமை - உப்புமா மற்றும் சாம்பார், செவ்வாய், வெள்ளிக்கிழமை - காய்கறி கிச்சடி மற்றும் சாம்பார், புதன் - பொங்கல் மற்றும் சாம்பார் வழங்கப்படுவதாக, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்