உள்ளூர் செய்திகள்

உயர் கல்வி கவுன்சில் 8 வல்லுநர் நியமனம்

பெங்களூரு: கர்நாடகா உயர் கல்வி கவுன்சில் உறுப்பினர்களாக எட்டு கல்வி வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப, உயர் கல்வி துறையை மேம்படுத்துவதற்காக, கர்நாடக உயர் கல்வி கவுன்சில் செயல்படுகிறது. இந்தாண்டு, புதிதாக எட்டு கல்வி வல்லுநர்களை உயர் கல்வி கவுன்சில் உறுப்பினர்களாக, உயர்கல்வி துறை அமைச்சகம் நியமனம் செய்துள்ளது.ஓய்வு பெற்ற துணைவேந்தர் ராஜாசாப், சுனந்தம்மா, போரலிங்கையா, ராமசந்திர கவுடா, சுபாஷ், கல்வி வல்லுனர்கள் ஜெயராம் மேலுகோட்டே, தேவிகா மாதஹள்ளி, தினேஷ் குமார் ஆல்வா ஆகியோர் அடங்குவர்.இவர்களுக்கு கல்வி துறையில் ஏற்கனவே அனுபவம் உள்ளது. பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர்கள் என்பதால், அரசு நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்