உள்ளூர் செய்திகள்

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி

TMI e2E அகடமி மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில்(என்.எஸ்.டி.சி௦ ஆகியவை இணைந்து, பட்டதாரிகள் வேலை பெறுவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கியுள்ளன. ஏறக்குறைய 5.5 லட்சம் பட்டதாரிகளை, வர்த்தக துறையில் பணியமர்த்துவதே இதன் லட்சியம். ஜூன் மாதம் 6 ம் தேதி, முதல் அணிக்கான மார்கெடிங் பயிற்சி, போபால் மற்றும் ஐதராபாத்தில் தொடங்கியது. இந்திய இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், மனிதன் மற்றும் விலங்குகள் ஆரோக்கிய துறையில், 120 நபர்களை பணியமர்த்துவது இந்த முக்கிய நோக்கம். இந்த 120 நபர்கள், அந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதிலுமுள்ள 76 கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள். இதைப்பற்றி விரிவான தகவலை அறிய www.iil.tmie2eacademy.com என்ற இணையதளம் செல்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்