உள்ளூர் செய்திகள்

பொறியியல் கலந்தாய்விற்கு வராதோர்

பொதுப்பிரிவு கவுன்சிலிங் அண்ணா பல்கலையில் 8ம் தேதி துவங்கியது. முதல் நாளில் (ஜூலை 8), 1,025 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களில், 306 பேர் வரவில்லை. ஒரு மாணவர், கவுன்சிலிங்கிற்கு வந்து, பாடப்பிரிவு எதையும் தேர்வு செய்யாமல் சென்று விட்டார். 718 மாணவர்களுக்கு, சேர்க்கைக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. முதல் நாளில், 20.85 சதவீதமாக இருந்த, ஆப்சென்ட், இரண்டாவது நாளில், 17.03 சதவீதமாக குறைந்தது. இரண்டாவது நாளில் (ஜூலை 9), 2,913 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களில், 496 பேர் வரவில்லை. 2,404 மாணவர்கள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்து, சேர்க்கை உத்தரவுகளை பெற்றனர். 13 மாணவர்கள், கவுன்சிலிங்கிற்கு வந்து, எதிர்பார்த்த பாடப்பிரிவு கிடைக்காததால், சென்றுவிட்டனர். மூன்றாவது நாளில் (ஜூலை 10) , 3,097 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களில், 436 பேர் வரவில்லை. 2,654 மாணவர்கள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்து, சேர்க்கை உத்தரவுகளை பெற்றனர். 7 மாணவர்கள், கவுன்சிலிங்கிற்கு வந்து, எதிர்பார்த்த பாடப்பிரிவு கிடைக்காததால், சென்றுவிட்டனர். மூன்றாவது 14.08 சதவீதமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்