பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
சென்னை: மழைநீர் தேங்கி உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்னும் மழைநீர் தேங்கி உள்ளதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.