கல்லூரிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி
கோவை:கோவையில், கார்பரேட் கம்பெனிகள் மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கிடையேயான, 'டி.பி.எல்.,' கிரிக்கெட் போட்டியின் பெயர் பதிவு நடந்து வருகிறது.குமரகுரு பிசினஸ் ஸ்கூல் மற்றும் கோயமுத்துார் யங் இந்தியன்ஸ் சார்பில், 'டி.பி.எல்., (துாஷ்ரா பிரிமியர் லீக்)' கிரிக்கெட் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு அணியில், 11 வீரர்கள் மற்றும் இரண்டு மாற்றுவீரர்கள் (சப்ஸ்டியூட்ஸ்) இருக்க வேண்டும்.லீக், அரைஇறுதி, இறுதிச்சுற்று என போட்டிகள் நடக்கும். லீக் போட்டியில், ஆறு ஓவர்கள், அரை இறுதியில் எட்டு ஓவர்கள், இறுதிச்சுற்றில் பத்து ஓவர்கள் என மூன்று நாட்கள் (ஏப்., 14- 17ம் தேதி வரை) நடக்க உள்ளன.முதல் நாள் கார்ப்பரேட் கம்பெனி அலுவலர்களுக்கும், இரண்டாம் நாள் கல்லுாரி மாணவர்களுக்கும், மூன்றாம் நாள் அரைஇறுதி சுற்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வெற்றி பெறும் ஒரு கார்பரேட் அணி மற்றும் கல்லுாரி அணிக்கு இடையே இறுதிச்சுற்று நடக்கும். போட்டியில் வெற்றி பெறும் மூன்று அணிக்கு, ரூபாய், 40, 20, 10 ஆயிரம் முறையே காசோலை வழங்கப்படும். இதற்கான பெயர் பதிவு வரும், 8ம் தேதி வரை நடக்கும். பதிவுக்கு, 96330 81962 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.