உள்ளூர் செய்திகள்

படித்துக் கொண்டே இருக்கணும்

இன்பர்மேஷன் டெக்னாலஜி&' குறித்து, கணேஷ் மகாதேவன் பேசியதாவது: ஐ.டி., துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இத்துறையை பொருத்தவரை, படிப்பு மிக முக்கியம். தினமும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.  இன்றைய நிலவரம், நாட்டு நடப்பு தெரிந்திருக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேறிய பலரும், கீழே இருந்து மேலே வந்தவர்களே. தன்னை தானே தாழ்த்தி கொள்பவர்களால், முன்னேற முடியாது. முடியும் என்ற நம்பிக்கையும், முயற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம். இத்துறையில், வேலைவாய்ப்பு அதிகம் என்றாலும், போட்டியும் அதிகம். யார் சிறந்தவர்களோ, அவர்களுக்கே பணி வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவில், ஐ.டி., துறையில் சிறியது, நடுத்தரமானது, பெரியது என, 7,000 நிறுவனங்கள் உள்ளன; இதில் ஆண்டுக்கு, ஒன்பது லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. 12 லட்சம் பேர், பணிபுரிகின்றனர். ரயில்வே துறையை காட்டிலும், அதிக எண்ணிக்கையில் பணி செய்வோர், ஐ.டி., துறையில் உள்ளனர். ஐ.டி., நிறுவனங்களின் வர்த்தகம், 2020ல், 18 லட்சம் கோடி ரூபாய் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளது. தகுதியில்லை எனில், நிலைத்திருக்க முடியாது. மாறி கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப, தங்களை மாற்றிக்கொண்டு, அறிவு திறனை காட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும். கடந்த, 300 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை விட, வரும், 20 ஆண்டுகளில் மாற்றங்கள் பெரிதாக இருக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு, ஐ.டி., துறையில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இரண்டாம் நிலை நகரங்களில், ஐ.டி., நிறுவனங்கள் அமைக்க, ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்கான உள்கட்டமைப்பு அரசு தரப்பிலும் செய்து தரப்படுகிறது. ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் எழுதவும், படிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். இதற்காக, தீவிர பயிற்சி எடுக்க வேண்டும். திட்டமிடல் இல்லையென்றால், எதையும் சிறப்பாக செய்ய முடியாது. 60 ஆண்டுகள் உயிர் வாழும் ஒருவர், தனது வாழ்நாளில் தினமும் எட்டு மணி நேரம் தூங்கி, மூன்றில் ஒரு பகுதியாக, 20 ஆண்டுகளை, தூக்கத்திலேயே கழிக்கிறார். நேரத்தை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்