உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு கட்டணம் வசூல்

வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி பொதுத்தேர்வுகள் நடக்கின்றன. இதற்காக, தேர்வெழுதும் மாணவ, மாணவிகள் பற்றிய பட்டியல், மாவட்ட வாரியாக பெறப்பட்டுள்ளன.  பொதுத்தேர்வுக்கான கட்டணத்தை, நவம்பர் 18ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.பத்தாம் வகுப்பு மாணவர்களாக இருந்தால் 115 ரூபாயும், பிளஸ் 2 மாணவர்களாக இருந்தால் 175 ரூபாய் (செய்முறைத் தேர்வு இல்லாதவர்கள்), 225 ரூபாய் (செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்கள்) செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்த தேதி நிர்ணயித்த போதிலும், பல பள்ளிகளில் இப்போதே மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்