உள்ளூர் செய்திகள்

சுவடியியல் இணையவழி பயிலரங்கம்

சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் நுால் நிலையம் மற்றும் தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி, நாமக்கல் மாவட்டம் இணைந்து, &'சுவடியியல் - பதிப்பும் தொகுப்பும்&' என்ற இணைய வழி பயிலரங்கத்தை நடத்துகிறது. இதற்கான துவக்க விழா, நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, &'செவ்விலக்கியப் பதிப்புகளில், சுவடிகளின் பங்கு&' என்ற தலைப்பில், பயிலரங்கம் நடந்தது. வரும், 8ம் தேதி வரை, இணையவழி பயிலரங்கம் நடைபெற உள்ளது. தினமும் காலை, 11:00 முதல், 12:30 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும், வெவ்வேறு தலைப்புகளில், தமிழ் அறிஞர்கள் உரை நிகழ்த்த உள்ளனர். நிறைவு விழா, 8ம் தேதி காலை, 12:30 மணிக்கு நடைபெறும். பயிலரங்கத்தில் பங்கேற்க விரும்புவோர், meet.google.com/fxo--jyjd--evb என்ற, இணைய முகவரியை தொடர்பு கொள்ளலாம் என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்