உள்ளூர் செய்திகள்

நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி எழுத்தாளர் இளவரசி சங்கர் எழுதிய மாண்புமிகு மதிவாணன் என்னும் புதின நுால் வெளியீட்டு விழா தமிழ்சங்கத்தில் நடந்தது.அரசுச் செயலர் வல்லவன், வெளியிட, ஜானகி தேவி விசாகரத்தினம் பெற் றுக் கொண்டார். தமிழ்ச்சங்கச் செயலாளர் சீனு மோகன்தாசு நுால் திறனாய்வு செய்தார். வீரமணி தலைமை தாங்கினார். வி.சி., கட்சி நிர்வாகி பாவாணன், டாக்டர் தாசரி பாப்பா, உசேன், தமிழ்நெஞ்சன், ஆறுசெல்வன், சுந்தரமுருகன், தமிழமல்லன் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் இளம்பரிதி, மதிவாணன், பாலசுப்பிரமணியன், பிரபா, அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்