உள்ளூர் செய்திகள்

எனக்கு பொறாமை: கஸ்துாரி

சென்னை: &'ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களை பார்த்து பொறாமைப் படுகிறேன்&' என, நடிகை கஸ்துாரி கூறியுள்ளார்.ஒன்பது முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்கள், தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக, அரசு அறிவித்ததற்கு, மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, நடிகை கஸ்துாரி, &'டுவிட்டரில்&' கூறுகையில், &'நான் உண்மையிலே பொறாமைப் படுகிறேன். தமிழக பள்ளி மாணவர்கள், கொரோனாவால் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்&' என, பதிவிட்டுள்ளார். அத்துடன், &'ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஓட்டுரிமை மட்டும் இருந்தால், இ.பி.எஸ்., தான் அடுத்த முதல்வர்&' என பலரும், &'கமென்ட்&' அடிப்பதோடு - ஆல் பாஸ் இ.பி.எஸ்., - என்ற, &'ஹேஷ்டேகை&'யும் உருவாக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்