ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுமுறை
தமிழகத்தில் கடந்த 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், முன்னாள் காவலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இந்த தேர்தல் பணியில் ஆசிரியர்களின் பங்கு அளப்பறியது.கற்பிக்கும் பணிகளுடன் தேர்தல் பணிகளும் சேர்ந்தது ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமையாகிப் போனது. கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில் 7ம் தேதி ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனால் மாவட்ட நிர்வாகங்கள் ஏற்கவில்லை. இந்நிலையில் ஆசிரியர்கள் இம்மாதத்தில் வேறொரு நாளில் சிறப்பு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.