உள்ளூர் செய்திகள்

சி.ஏ., தேர்வு நடக்குமா?

புதுடில்லி: &'கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால், சி.ஏ., எனப்படும் கணக்கு தணிக்கையாளர் தேர்வுகளை, ஜூலை 5ல் துவங்க அனுமதிக்க வேண்டும்&' என, இந்திய கணக்கு தணிக்கையாளர் மையம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.கொரோனா வைரஸ் பரவலால், சி.ஏ., தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள், நீதிபதிகள், ஏ.எம். கன்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, அனிருத்தா போஸ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது, இந்திய கணக்கு தணிக்கையாளர் மையம் சார்பில் கூறப்பட்டதாவது:கடந்தாண்டு சி.ஏ., தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. பாதிப்புகள் குறைந்து, உகந்த காலமாக இருந்ததால், கடந்தாண்டு, நவ.,ல் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.இந்தாண்டு மே மாதம் நடத்த வேண்டிய தேர்வு, கொரோனா பரவலால் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. தற்போது பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதனால் வரும் ஜூலை 5 முதல் 20ம் தேதி வரை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் நடத்தும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுடன், இந்தத் தேர்வை ஒப்பிடக் கூடாது. இது தொழில் ரீதியிலான தேர்வு. அதனால் திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன், கடந்தாண்டைப் போலவே வெற்றிகரமாக தேர்வுகளை நடத்த அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டது.இது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால், இன்று விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்