அரசு பள்ளியை சீரமைக்கணும்!
வால்பாறை: வால்பாறை நகரில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியானது, கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. சமீப காலமாக இந்தபள்ளியின் மேற்கூரை மழை காலத்தில் ஒழுகி, வகுப்பறை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. காலாண்டு விடுமுறையில், பள்ளி வகுப்பறையின் மேற்க்கூரையை சீரமைக்க வேண்டும். பள்ளி வகுப்பறையில் சேதமான கதவு, ஜன்னல்களையும் மாற்றியமைக்க வேண்டும், என, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், வால்பாறை தாலுகா ஏ.ஐ.டி.யு., தொழிற்சங்க பொதுச்செயலாளர் மோகன் வலியுறுத்தியுள்ளார்.