உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

ஊட்டி: அரசு பள்ளியில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.ஊட்டி சி.எஸ்.ஐ.-சி.எம்.எம்., மேல்நிலைப் பள்ளியில், மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி நடந்தது. நீலகிரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமையில், கோவை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பிரேமா, களப்பணியாளர் பிரபாகரன் முன்னிலையில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், மாணவர்கள் ஆன்லைன் மூலம் பல கண்டுபிடிப்புகளை பார்த்து புதிதாக ஒன்றை இக்காலத்திற்கு ஏற்றவாறு கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்