உள்ளூர் செய்திகள்

பதிவாளர், தேர்வாணையர் நியமனம்

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை., கணக்கீடு மற்றும் தளவாடங்கள் துறை தலைவராக பணியாற்றிய அ.செந்தில்ராஜன் புதிய பதிவாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அழகப்பா பல்கலை அரங்கம் மற்றும் திரைப்பட படிப்புகள் துறை தலைவர் மு.ஜோதிபாசு தேர்வாணையராகவும், முன்னாள் தேர்வாணையராக பொறுப்பு வகித்த எ.கண்ணபிரான் தொலைநிலை மற்றும் நிகழ்நிலை கல்வி மைய இயக்குனராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணைவேந்தர் க. ரவி வழங்கினார். இதில், அழகப்பா பல்கலை., ஆட்சிக்குழு உறுப்பினர் சுவாமிநாதன் குணசேகரன் பழனிச்சாமி ராஜாராம் சேகர் மற்றும் ராஜமோகன் குருமல்லேஸ் பிரபு உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்