உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை

திருவொற்றியூர்: திருவொற்றியூர்,மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு, 10.30 லட்சம் ரூபாய் செலவில், கூடுதல் ஸ்மார்ட் வகுப்பறை கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.திருவொற்றியூர் மண்டலம் 10வது வார்டில், மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், சி.பி.சி.எல்., நிறுவன சமூக மேம்பாட்டு நிதியான, 10.30 லட்சம் ரூபாய் செலவில், கூடுதல் ஸ்மார்ட் வகுப்பறை கட்டும் பணி துவங்கி நடந்தது.பணிகள் முடிந்த நிலையில், கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், 10வது வார்டு கவுன்சிலரும், மண்டல குழு தலைவருமான தனியரசு பங்கேற்று, புதிய ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்