உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் திடீர் சோதனை

பள்ளிகளில், மற்ற மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் கொண்டு வரவில்லை என்பதை உறுதிப்படுத்த, திடீர் பை சோதனைக்கு குழுக்களை அமைக்குமாறு டெல்லி கல்வி இயக்குனரகம் உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி வாயில்களில் காவலர்கள், மாணவர்களின் பைகளை தவறாமல் சரிபார்ப்பதையும், சிசிடிவிகள் எப்போதும் செயல்படுவதை உறுதிசெய்யவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமை ஆசிரியர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், தெற்கு டெல்லி பகுதியில் ஒரு 11ம் வகுப்பு மாணவர், பிற மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்ததை அடுத்து, இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்