ஐ.சி.ஏ.ஐ., பொறுப்பாளர்கள் தேர்வு
சென்னை: இந்திய பட்டய கணக்காளர் கழகத்தின் தென்னிந்திய பிராந்திய கவுன்சிலின் அலுவலக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இந்திய பட்டய கணக்காளர் கழகத்தின் தென்னிந்திய பிராந்திய கவுன்சிலின், 258வது கூட்டம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் 2024-25ம் ஆண்டுக்கான அலுவலக பொறுப்பாளர்களுக்கான துணைத் தேர்தல் நடந்தது.இதில், பெங்களூரைச் சேர்ந்த கீதா தலைவராகவும், சென்னையைச் சேர்ந்த ரேவதி ரகுநாதன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆந்திரா மாநிலம், குண்டூரைச் சேர்ந்த சுப்பாராவ் முப்பாலா செயலராகவும், கேரளா மாநிலம் திரிச்சூரைச் சேர்ந்த சதீஷன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும், தென்னிந்திய பட்டய கணக்காளர் மாணவர் சங்கத் தலைவராக, ஹைதராபாதைச் சேர்ந்த மாண்டவ சுனில் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.