உள்ளூர் செய்திகள்

ஓ.எம்.ஆரில் புத்தக கண்காட்சி

துரைப்பாக்கம்: ஓ.எம்.ஆர்., பெருங்குடி சுங்கச்சாவடி அருகில் உள்ள, வள்ளலார் சன்மார்க்க அரங்கத்தில், இன்று முதல் மே 2ம் தேதி வரை, 10 நாட்கள் புத்தக கண்காட்சி நடக்கிறது.அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம், யுனைடெட் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தும் கண்காட்சி, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை நடைபெறும். துவக்க விழாவான இன்று மாலை, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அறிவொளி, கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் முதல் விற்பனையை துவக்கி வைப்பதுடன், திரைப்பட இயக்குனர் சீனுராமசாமி, முதல் விற்பனையை பெறுகிறார். கதை, நாவல், கவிதை, வரலாறு, குழந்தைகள் நுால்கள் இடம் பெறும். ஒவ்வொரு நுால்களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என, புத்தக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்