ஆசிரியர் போராட்டம் ஒத்திவைப்பு
மல்லசமுத்திரம்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், கடந்த, 19ல் செயற்குழு கூட்டம் நடந்தது.அதில், மல்லசமுத்திரம் ஒன்றியத்தின் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்பு பயன்பாட்டு கட்டண தொகையை, கல்வித்துறை நேரடியாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று, மல்லசமுத்திரம் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன், போராட்டம் நடத்த போவதாக தீர்மானம் நிறைவேற்றினர்.இந்நிலையில், நாமக்கல் மாவட்ட தொடக்கநிலை அலுவலர் சுப்ரமணியன், கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக ஒப்புதல் அளித்ததால், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.