மருத்துவம் சார்ந்த படிப்புகள்
தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவ கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் ஏராளமான துணை மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.படிப்புகள்:பி.பார்ம்பி.பி.டி.,பி.ஏ.எஸ்.எல்.பி.,பி.எஸ்சி., - நர்சிங்பி.எஸ்சி., - ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம்பி.எஸ்சி., - ரேடியோ தெரபி தொழில்நுட்பம்பி.எஸ்சி., - கார்டியோ-நுரையீரல் செயல்திறன் தொழில்நுட்பம்பி.எஸ்சி., - மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்பி.எஸ்சி., - ஆபரேஷன் தியேட்டர் மற்றும் மயக்க மருந்து தொழில்நுட்பம்பி.எஸ்சி., - கார்டியாக் தொழில்நுட்பம்பி.எஸ்சி., - கிரிட்டிகல் கேர் தொழில்நுட்பம்பி.எஸ்சி., - டயாலிசிஸ் தொழில்நுட்பம்பி.எஸ்சி., - பிசிசியன் உதவியாளர்பி.எஸ்சி., - விபத்து மற்றும் அவசரகால தொழில்நுட்பம்பி.எஸ்சி., - சுவாச சிகிச்சைபி.ஆப்தோமெட்ரிபி.ஓ.டி.,பி.எஸ்சி., நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜிபி.எஸ்சி., - கிளினிக்கல் நியூட்ரிசன்தகுதிகள்: இந்திய குடிமகனாகம், தமிழகத்தை பூர்வீகமாவும் கொண்டவராக இருத்தல் வேண்டும். தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு பள்ளியில், 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி வேறுபடும் என்றபோதிலும், பொதுவாக 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும்.கல்வி நிறுவனங்கள் மற்றும் இடங்கள்: தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள்.விண்ணப்பிக்கும் முறை: https://reg25.tnmedicalonline.co.in/pmc25/ எனும் இணையதளம் வாயிலாக தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: 500 ரூபாய்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 7 விபரங்களுக்கு: https://tnmedicalselection.net/