பாலிடெக்னிக் வளாகத் தேர்வு
திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் இயந்திரவியல்,மின்னியியல், மெக்கட்ரானிக்ஸ் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடந்தது. முதல்வர் சசிகுமார் வரவேற்றார். கல்லுாரி தலைவர் சொக்கலிங்கம் தலைமையுரையாற்றினார். சென்னை ஹூண்டாய் மொபிஸ் நிறுவன மனிதவள மேம்பாடு அலுவலர் ஜி.ஐயப்பன் வளாகத் தேர்வினை நடத்தினர்.பங்கேற்ற 250 மாணவர்களில் 105 மாணவர்கள் தேர்வு பெற்று பணி நியமன ஆணை பெற்றனர். வேலைவாய்ப்பு அலுவலர் அபினேஷ் நன்றி கூறினார்.