கல்லுாரி பட்டமளிப்பு விழா
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லூரியில் 2025ம் கல்வியாண்டில் படித்த மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லூரி தலைவர் திலகவதி, செயலர் அருணா தலைமை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் மகேஸ்வரன், ப்ரீத்தி முன்னிலை வகித்தனர். முதல்வர் சுகா பெரியதாய், கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் ராஜாமணி வரவேற்றனர்.காந்தி கிராம பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம், மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசினார்.இளநிலை, முதுநிலையைச் சேர்ந்த 1078 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் அன்ன பாக்கியம், வந்தனா செய்தனர்.