உள்ளூர் செய்திகள்

கல்லுாரி ஆண்டு விழா

மதுரை: மதுரை சமூக அறிவியல் கல்லுாரியின் 57ம் ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி செயலாளர் தர்மசிங் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயக்குமார் ஆண்டறிக்கை வாசித்து வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) முத்தையா பங்கேற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய இறுதியாண்டு மாணவ மாணவியர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கினார். இறுதியாண்டு மாணவர்கள் தங்களது கல்லுாரி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு மெழுகுவர்த்தி ஏந்தி, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சமூகப்பணித்துறை தலைவர் நிஷாந்த் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்