உள்ளூர் செய்திகள்

பல்கலையில் இசை நிகழ்ச்சி

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தஞ்சை தென்னக கலைப் பண்பாட்டு மையம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுண்கலைப் புலம் சார்பில் 'தேவாரமும் தமிழிசையும்' எனும் சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது.அண்ணாமலை பல்கலை அறிவியல் துறை ஹைடெக் அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு தென்னக பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். பல்கலை நுண்கலை புல முதல்வர் அருட்செல்வி வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, திருத்தணி சுவாமிநாதன் தேவாரப் பாடல்கள் படினார். சிக்கில் குருசரண் தமிழ்க் கீர்த்தனைகள், கோவிந்தராஜன் வயலின், நடராஜ ரத்ன தீக்ஷிதர் மிருதங்கம், திருச்சி ஸ்ரீ கிருஷ்ணா கடம் இசைத்தனர். நிகழ்ச்சியில் புலமுதல்வர்கள் ஸ்ரீராம், அருள், பாஸ்கர், சரண்யா மற்றும் பலர் பங்கேற்றனர். இசைத்துறை தலைவர் சுதர்சன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை இசைத்துறை இணை பேராசிரியர் குமார் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்