உள்ளூர் செய்திகள்

வேலை செல்வோரும் படிக்கலாம்

ஐ.ஐ.எம்., ஆமதாபாத் கல்வி நிறுவனம் மேலாண்மை பிரிவில் ஆய்வு செய்ய விரும்பும் வேலை செல்வோர் அங்கேயே தங்கி படிக்க வேண்டிய அவசியமில்லை என அறிவித்துள்ளது. அவர்கள் தேவைப்படும்போது வந்து சென்றாலே போதும் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 1970ம் ஆண்டிலிருந்து இக்கல்வி நிறுவனம் முழுநேர தங்கி படிக்கும் வகையில் நான்கு ஆண்டு ஆய்வு படிப்பை வழங்கி வருகிறது. தற்போது வேலை செல்வோருக்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆய்வு படிப்பின் தரத்தை மேம்படுத்தும் விதத்தில் வெளிநாட்டு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பெறவும் ஐ.ஐ.எம்., ஆமதாபாத் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்