ஹோமியோபதிக்கு ஐ.ஐ.டி., ஆதரவு
சில மாதங்களுக்கு முன்பு, "பிரிட்டீஸ் மெடிக்கல் அசோசியேஷன்&' ஹோமியோபதி மருத்துவத்தின் நம்பிக்கையின்மைதன்மை பற்றி சில கருத்துக்களை வெளிப்படுத்தியது. இந்த கருத்தை ஹோமியோபதி மருத்துவர்கள் அடியோடு நிராகரித்தனர். இந்த மருத்துவ முறையினால் ஏராளமான நோயாளிகள் குணமடைந்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்நிலையில் மும்பை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த குழு ஹோமியோபதி மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த குழு மிகவும் சக்தி வாய்ந்த நுண்ணோக்கியை வைத்து ஹோமியோபதி மருந்தை ஆராய்ச்சி செய்தது. இதுகுறித்து மும்பை ஐ.ஐ.டி.,யின் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவைச்சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.ஜெயேஷ் ஆர்.பெல்லார் (Dr Jayesh R Bellare) கருத்து தெரிவித்துள்ளார். இந்த ஆராய்ச்சியின் முடிவில், அறிவியல் ரீதியாக ஹோமியோபதி மருத்துவத்தின் நம்பகத்தன்மையை நிருபிக்க முடியும் என தாங்கள் வெற்றிகரமாக கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆராய்ச்சிகள் ஹோமியோபதி மருத்துவ முறையின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் தங்களை நாடி வருவதற்கு உதவும் என ஹோமியோபதி மருத்துவர்கள் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.