உள்ளூர் செய்திகள்

குருகுல மாணவிகள் சாதனை

வேதாரண்யம்: வேதாரண்யம் குருகல ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள், நாகை மாவட்ட அளவில் நடந்த தேர்வில் முதலிடம் பெற்றனர். கடந்த ஜூன் மாதம் நடந்த ஆசிரியர் பயிற்சி இரண்டாமாண்டு தேர்வில் 81 சதவீதம் மாணவிகள் வெற்றி பெற்று நாகை மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். ஜெயசுதா 724 மார்க் பெற்று முதலிடத்திலும், சிவரஞ்சனி 710 பெற்று இரண்டாமிடத்திலும், கவிநிலா 702 பெற்று மூன்றாமிடத்திலும் தேர்ச்சி பெற்றனர். சாதனை புரிந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகிகள் வேதரெத்தினம், கேடிலியப்பன், முதல்வர் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்