சிறந்த கல்லூரியின் அடையாளங்கள்
* இன்றைய நவீன யுகத்தில், கம்ப்யூட்டர் லேப் வசதி, வேகமான இணையதள வசதி, நூலக வசதி, கம்யூனிகேஷன் லேப், கான்பரன்ஸ் ஹால், செமினார் ஹால், விளையாட்டு மைதானங்கள் போன்ற நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்து கல்லூரிகளுக்கும் அவசியமானது. * கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள் போதுமான கல்வி தகுதியை பெற்றிருப்பது அவசியம். சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். அதற்கு ஆசிரியர்கள் போதுமான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். * ஏ.ஐ.சி.டி.இ., என்.பி.ஏ.,போன்ற அமைப்புகளின் அங்கீகாரத்தை கல்லூரி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனியாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். * கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் வளாகத்தேர்வு நடத்தப்பட வேண்டும். இது குறித்த விவரங்களை முன்னாள் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் முந்தைய ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் வளாகத்தேர்வு மூலமாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். * இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது ஒரு சிறந்த கல்லூரியின் அடையாளமாக கருதப்படுகிறது. * வேலைவாய்ப்பு பெற தேவையான "சாப்ட் ஸ்கில்ஸ்' கல்லூரியில் கற்றுத்தரப்பட வேண்டும்.