வேலைவாய்ப்புள்ள உருக்காலைத் துறை
Foundry என்பது உலோகங்களை உருக்கிப் பொருள்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. உலோகங்களை முதலில் திரவ வடிவில் உருக்கி, அவற்றைச் சரியான அச்சுகளில் ஊற்றுகின்றனர். பின் அச்சுப்பொருள்களை நீக்குகிறார்கள். அதன் மூலம் அதனை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வருகிறார்கள். தேவைப்பட்டால், உலோகம் நன்கு குளிர்ந்த பிறகு அதை மாற்றுவதும் உண்டு. இப்படி மாற்றம் செய்யப்படுகிற உலோகங்கள், அலுமினியம் மற்றும் வார்ப்பு இரும்பு. இவை தவிர மற்ற உலோகங்கள், எக்கு, மக்னீசியம், தாமிரம், வெள்ளீயம், துத்தநாகம் போன்றவையும் வார்ப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுவது உண்டு. பலவகையான வார்ப்பு வழிமுறைகள் இருக்கின்றன. 1. General Castingஇந்த வகையில் அச்சு வடிவத்தை சுலபமாக நீக்கிவிட முடியும். பெரும்பாலான தயாரிப்பு வழி முறைகளில் பயன்படுத்தப்படும் பொது உத்தி இது. 2. . Investment Castingஇந்த வழிமுறை மிகவும் சிக்கலான வடிவங்களை உருவாக்கப் பயன்படுகிறது.இவற்றில் அச்சுகளை நாமே எடுப்பது சாத்தியம் இல்லை. வடிவம் மெழுகில் உருவாக்கப்படும். அதைப் பயன்படுத்தி அச்சு உருவாக்கப்படும். பின்னர் அந்த வடிவம் மெழுகை உருக்கி நீக்கப்படும். 3. Pressure Die Castingஇந்த வழிமுறையில் அச்சு ஓர் உலோகத்திலோ, வேறு கடினமான பொருளிலோ உருவாக்கப்படும். (உருகிய உலோகத்தின் சூட்டைத் தாங்குவதற்காக). பின்னர் உருகிய உலோகம் இதற்குள் அழுத்தத்தின் மூலம் தள்ளப்படுகிறது. இது இயந்திரத்தின்மூலம் நிகழ்த்தப்படுகிற வழிமுறை ஆகும். 4. ForgingForging என்பது உலோகத்தின்மீது தேவையான விசையைக்கொடுத்து அதனைச் சிக்கலான வடிவங்களுக்குக் கொண்டு வருவது. வழக்கமாக உலோகம் சூடாக்கப்பட்டு அடிக்கப்படக்கூடிய வெப்பநிலைக்கு கொண்டுவரப்படும். அதன்பிறகுதான் விசை வழங்கப்படும். 1. Manual forgingஉலோகம் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு உயர்த்தப்படுகிறது. அதன்பிறகு கையால் சுத்தியல் கொண்டு அடித்து தேவையான வடிவம் கொண்டுவரப்படுகிறது. 2. Power forgingஉலோகம் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு உயர்த்தப்படுகிறது. அதன்பிறகு, அதனை உபகரணங்களில் இடப்படுகிறது. இதன்மூலம் அது அழுத்தப்பட்டு, குறுக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக உலோகத்தின் வடிவம் மாறுகிறது. வழங்கப்படும் படிப்புகள்1. B.E (Mechanical Engineering Foundry) 2. M.Tech (Foundry Technology)3. Diploma (Mechanical Engineering)4. Diploma (Foundry Technology)5. ITI (Foundry)6. Certification (Foundry & Forging) இந்தப் படிப்புகள் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு www.studyGuideIndia.com என்ற இணையத்தளத்தை அணுகவும்.