உள்ளூர் செய்திகள்

முந்திக்கொண்ட தனியார் பள்ளிகள்

சமச்சீர் கல்விக்கான புத்தகங்கள் இந்த கல்வியாண்டு தொடங்குவதற்குள் வழங்கப்பட்டுவிடும் என்று அரசு அறிவித்திருந்தாலும், தனியார் பள்ளிகள், அந்த விஷயத்தில் முந்திக்கொண்டுள்ளன. பல தனியார் பள்ளிகள், 10 ம் வகுப்பு பாடங்களை விடுமுறையிலேயே முடித்துவிடும். பிறகு அந்த வருடம் முழுவதும் அந்த பாடங்களின் ரிவிசன் மற்றும் தேர்வுகளுக்கு பயன்படுத்தும். ஆனால் இந்தாண்டு 10 ம் வகுப்பில் சமச்சீர் பாடத்திட்டம் அமலாவதால், அரசிடமிருந்து பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கடந்த ஆண்டு வரை தனியார் வெளியீட்டாளர்களிடம் இருந்து வருடா வருடம் ஏப்ரல் மாதத்தில் கல்வியாண்டிற்கான புத்தகங்களை தனியார் பள்ளிகள் பெற்றுவந்தன. தற்போது சமச்சீர் கல்வி திட்டத்தால் புத்தகங்கள் பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்ற சூழல் நிலவுகிறது ஆனால் புதிய பாடத்திட்டத்திற்கான மென் நகல்களை(சாப்ட் காபீஸ்) பிரிண்டர்களிடமிருந்து தனியார் பள்ளிகள் பெற்று, அவற்றை பல நகல்கள் எடுத்து மாணவர்களுக்கு விநியோகித்து தங்களின் செயல்பாட்டை தொடர்ந்து மேற்கொள்கின்றன. இதன்மூலம் புதிய புத்தகங்கள் விநியோகிப்பதில் ஒருவேளை தாமதம் ஏற்பட்டாலும், அது தனியார் பள்ளிகளை பாதிக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்