உள்ளூர் செய்திகள்

துணைக் கலந்தாய்வில் 1176 பேர் சேர்க்கை பெற்றனர்

துணைக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில், 25 பேர் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதால் பெரும்பாலான மாணவர்கள் சுயநிதி பொறியியல் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 1151 மாணவர்கள் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்று அதற்கான ஆணையை பெற்றுக் கொண்டனர். மொத்தமாக 1176 மாணவர்கள் துணைக் கலந்தாய்வு மூலம் பயனடைந்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் துணைக் கலந்தாய்வை நடத்தியது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவடைந்து அடுத்த தினமே ஆகஸ்ட் 12ம் தேதி துணைக் கலந்தாய்வு துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்