உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் விரைவில் 12,588 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வி செயலர் சபிதா

திண்டுக்கல்: தமிழகத்தில் இந்த ஆண்டில் 12,588 ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்தார். திண்டுக்கல்லில் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது; இதை சரிசெய்ய வேண்டும். நான்கு ஆண்டுகளில் காலியாக இருந்த 76,684 பணியிடங்களில் 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்