சென்னை பல்கலைக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தில், நான்கு கோடி ரூபாய் வழங்கியிருந்தது. தற்போது 11வது ஐந்தாண்டு திட்டத்தில் (2007 - 12), சென்னை பல்கலைக்கழகத்திற்கு 18 கோடியே 34 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில், சேப்பாக்கம் வளாகத்திற்கு மூன்று கோடியே 49 லட்சம் ரூபாய், மெரீனா வளாகத்திற்கு 87 லட்சம் ரூபாய், கிண்டி வளாகத்திற்கு இரண்டு கோடியே 20 லட்சம் ரூபாய், தரமணி வளாகத்திற்கு இரண்டு கோடியே 16 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. மாணவிகள் விடுதிக்கு இரண்டு கோடி ரூபாய், நூலகத்திற்கு ஒரு கோடி ரூபாய், பழைய பல்கலைக்கழகங்கள் மறுசீரமைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தொகை துறை வாரியான ஆராய்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.