உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் அடித்து 20 மாணவர்கள் காயம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் பள்ளி பஸ்சில் சத்தம் போட்டதாக இருபதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஆசிரியை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று (நவம்பர் 25) மாலை 3.30 மணியளவில் வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல பள்ளி பஸ்சில் மாணவ, மாணவிகள் ஏறினர். அப்போது சில மாணவர்கள் அடம் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாலதி என்ற பெண் ஆசிரியை பாலையூரை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை குச்சியால் சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதில் உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்