உள்ளூர் செய்திகள்

கோவையில் நவ. 28ம் தேதி ‘ஜெயித்துக் காட்டுவோம்’

கோவை: பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளுவதற்கான பயனுள்ள ஆலோசனைகளை அள்ளித் தரும் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி, கோவை சி.ஐ.டி. கல்லூரியில் நாளை (நவ. 28ம் தேதி) நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற, ‘தினமலர்’ நாளிதழ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தேர்வை சந்திக்கும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் மாணவர்களுக்கு அளிக்கும் இந்த பயனுள்ள நிகழ்ச்சி, தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, லட்சக்கணக்கான மாணவ மாணவியர் பயன் அடைந்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி கோவை அவினாசி ரோட்டில் உள்ள சி.ஐ.டி., கல்லூரி ஆடிட்டோரியத்தில் நாளை காலை துவங்குகிறது. காலை 9.00 மணிக்கு பத்தாம் வகுப்பு ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கும், மதியம் 12.30 மணிக்கு மெட்ரிக் மாணவர்களுக்கும் அனைத்து பாடங்கள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. நவ., 28ல்(நாளை) காலை 9.00 மணி முதல் பிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கும், மதியம் 12.30 மணிக்கு கலைப்பிரிவு மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படவுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை அள்ளுவதற்கான பயனுள்ள ‘டிப்ஸ்’, தன்னம்பிக்கை, மனோதைரியத்தை வளர்த்துக் கொள்வது, தேர்வில் நேர நிர்வாகத்தை கடை பிடிப்பது, தேர்வில் செய்யக் கூடாத தவறுகள், சிறந்த முறையில் விடையளிப்பது, திட்டமிட்டு படிப்பது, படித்ததை நினைவில் நிறுத்துவது, தேர்வை பயமின்றி எதிர்கொள்வது, தேர்வு நாட்களில் உடல் நலனை பாதுகாப்பது, தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெற்றோரின வழிகாட்டல் என்பன உள்ளிட்ட பல பயனுள்ள ஆலோசனைகள் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளன. ஸ்டேட் போர்டு, மெட்ரிக் பள்ளிகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் அனுபவம் வாய்ந்த சிறப்பு ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர். முக்கிய பாடங்கள் பட விளக்கங்களுடன் ‘பவர் பாயின்ட்’ முறையில் விளக்கப்படவுள்ளன. பங்கேற்கும் மாணவ மாணவியருக்கு, தேர்வுக்கான முக்கிய வினாக்கள் மற்றும் புளூ பிரின்ட் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்படும். மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருடன் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்