காத்திருப்போர் பட்டியலும், 3ம் கட்ட மருத்துவ கலந்தாய்வும்
இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது, இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள், ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் உரிய கல்லூரிகளில் சேர்ந்துவிட வேண்டும் எனறு மருத்துவக் கலவி தேர்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது. எனவே, ஆகஸ்ட் 16ம் தேதி வரை கல்லூரியில் சேராத மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துத்தான் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களில் எத்தனை பேருக்கு வாய்ப்பு ஏற்படும் என்றும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்றும் அறிவிக்கப்படும். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாணவ சேர்க்கையை முடித்துவிட வேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 18ம் தேதி மூன்றாம் கட்ட கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அடுத்த கலந்தாய்வு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.