உள்ளூர் செய்திகள்

கல்விக்கடன் வேண்டி 300 மாணவர் விண்ணப்பம்

திருப்பூர்: சிறப்பு முகாமில், கல்விக்கடன் கேட்டு மாணவ, மாணவியர் 300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) சார்பில், சிறப்பு கல்விக்கடன் முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கல்விக்கடன் கேட்டு, விண்ணப்பம் அளித்தனர்.கனரா, ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ், பாங்க் ஆப் பரோடா உள்பட 22 வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்; மாணவர்களிடமிருந்து கல்விக்கடன் விண்ணப்பங்களை பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில், 1500 மாணவ, மாணவியருக்கு, 64 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.முகாமில் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படும். தாட்கோ, மாவட்ட தொழில் மைய கடன் திட்டங்கள், பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; சாலையோர வியாபாரிகளின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, கடன் வழங்கவேண்டும், என, வங்கியாளர்களுக்கு அறிறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஜெய்பீம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்